உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்

Home

shadow

             உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்

             பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

 
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ள 33 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி இன்று பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து அணியும் 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் மோதி வெற்றி பெறுமா என்பது  சந்தேகம் தான்.

இது தொடர்பான செய்திகள் :