உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டி

Home

shadow  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி


 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயன் மார்கன் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 87 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபாடா, இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து  தடுமாறியது.

39.5 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றிப் பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்களும், ப்ளங்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :