உலகக் கோப்பை ஜூரம்! வர்ணனையாளர் அணிவகுப்பு!!

Home

shadow

                  உலகக் கோப்பை ஜூரம்!
                 வர்ணனையாளர் அணிவகுப்பு!!

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விளையாட்டு அடையாளமாக கருதப்படும்.அப்படி இந்தியாவின் நாடி துடிப்பாக விளங்கும் விளையாட்டு கிரிக்கெட். ஒவ்வொரு ரசிகனும் கிரிக்கெட் விளையாட்டின் போது பாகுபலியாக மாறி வீட்டிலில் உள்ளவர்களை பலி  கொடுப்பதெல்லாம் வேற ரகம். கிரிக்கெட்  ஜாம்பவான்கள் நினைத்து கூட பாக்கமுடியாத அளவுக்கு ரசிகர்கள அவர்கள் மேல் வைத்துள்ள அன்பு 100 எவரெஸ்ட் மலையின் உயரத்தை தாண்டும். இந்திய - பாகிஸ்தான் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும். வெளிநாட்டு மண்ணில் வெற்றிபெரும் நாளை தீப திருநாளாக ரசிகர்கள் கொண்டாடி திளைப்பர். சச்சின் தொடங்கி டோனி வரை கிரிக்கெட் வீரர்களின் மோகம் இந்தியாவில்  பிறக்கும் குழந்தைக்கு கூட ஒட்டிக்கொள்ளும்.இந்தியர்களின் இதயத்துடிப்போடு துடித்து கொண்டிருக்கும் கிரிக்கெட்டில்பல தருணங்கள் மூச்சுக்காற்றை நிப்பாட்டும் அளவுக்கு நிகழ்ந்துள்ளன.குறிப்பாக, உலகக்கோப்பையில் இந்தியாவின் மீது எதிர்பார்ப்பு எப்பொழுதும் எகிறிக்கிடக்கும். அப்படி இந்தியர்களின் கனவை கபில் தேவ் தலைமையிலான அணி நிறைவேற்றியது. 1983 உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியதீவு அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒட்டு மொத்த இந்தியர்களின் கனவை நிறைவேற்றியது. அதன் பிறகு மீண்டும் கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டது. டோனி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை வென்று 2011 ஆண்டு உலகக்கோப்பையை தன் வசமாக்கியது. 2019 உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலகக் கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால் இந்த உலக கோப்பை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைய உள்ளது என்பதில் சந்தேகமில்லை. உலகக்கோப்பை  விளையாட்டில், விளையாட்டை எவ்வாறு ரசிக்கிறோமோ அவ்வளவு வர்ணனையாளர்களின் வார்த்தை ஜாலத்தையும் ரசிகர்கள் ரசித்து சிலாகிப்பார்கள். ஐசிசி, உலகக்கோப்பையில் பங்கு பெரும் வர்ணனையாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆஸ்திரேலியாவிற்கு 2015ல் உலக கோப்பையை வென்று கொடுத்த மைக்கேல் கிளார்க், குமார் சங்கக்கரா(இலங்கை), பிரண்டன் மெக்கல்லம்(நியூசிலாந்து), ஷான் போலாக்(தென்னாப்பிரிக்கா), மைக்கேல் ஹோல்டிங்(வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மித்(தென்னாப்பிரிக்கா), வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), ரமீஸ் ராஜா(பாகிஸ்தான்), நாசர் ஹூசைன்(இங்கிலாந்து), சைமன் டோல், மைக்கேல் சிலேட்டர், மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து), ஐயன் பிஷப்(வெஸ்ட் இண்டீஸ்), மேல் ஜோன்ஸ் , பம்மி மெபாங்வா, ஹர்ஷா போக்லே, அலிசன் மிச்சேல், சஞ்சய் மஞ்சரேக்கர், அதர் அலி கான் , ஈஷா குஹா, இயன் வார்டு,மைகேல் அத்தேர்டான் என 24 பேர் வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  2019 உலகக்கோப்பையில் இடம் பெறதா அணிகள் ஜிம்பாப்வே, அயர்லேண்ட், கென்யா, நெதர்லாண்ட்ஸ்,ஸ்காட்லாந்து. உலகக் கோப்பை ஜுரம் இப்போதே தொடங்கிவிட்டது. இனி சிக்சர்களும், பவுண்டரிகளும் வீட்டிலும் பறக்கும்.
 

இது தொடர்பான செய்திகள் :