உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.

Home

shadow


                    50 ஓவர் 12-வது உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நாளை கோலாகமாக தொடங்குகின்றன.
46 நாட்கள் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன.  மே 30 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்று மூலம் நுழைந்தன.போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’முறையில் 9 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.முதல் ஆட்டத்தில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, மூன்றாவது இடத்திலுள்ள தென்ஆப்பரிக்கா அணியுடன் மோதுகின்றது.
இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :