ஐஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Home

shadow

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் மோதின. கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் மும்பை வீரர் ரபெல் பாஸ்டோஸ் கோல் அடித்தார். கோவா வீரர்களால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியால் அந்த அணிக்கு பலன் இல்லை. ஏற்கனவே அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கோவா 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி இருந்தது. இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் 5-2 என்ற கோல் முன்னிலையுடன் கோவா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுவரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :