ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தானா மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்

Home

shadow

ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தானா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தானா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 6-வது இடத்தில் இருந்த மந்தானா தற்போது  மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மிருதி ஏற்கெனவே ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மகளிர் பேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹர்மன்ப்ரீத் கெளர் 2 இடங்கள் பின்தள்ளப்பட்டு 9-ஆவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் 5 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தில் உள்ளார். ஏக்தா பிஷ்ட் 56-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆப் ஸ்பின்னர் அனுஜா பட்டீல்31-ஆவது இடத்தில் உள்ளார். அணிகள் பிரிவில் ஆஸி. முதலிடத்திலும், இங்கிலாந்து 2-ஆவது இடத்திலும், நியூஸிலந்து 3-ஆவது இடத்திலும் உள்ளன.

இது தொடர்பான செய்திகள் :