ஐபிஎல் ஏலம்  

Home

shadow

இந்திய உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றுக்கான நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி தொடர்பான உரிமைகளை ஸ்டார் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. இது தொடர்பான செய்திக் குரிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குரிப்பில், 2018 2019 ஆம் ஆண்டுக்கான, 19 சீசனுக்கான உள்ளூர் போட்டிகள் மற்றும் 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஆகிவற்றின் நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை தொடர்பாக, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டதாகவும், இதனை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல், மற்றும் சீசனுக்கான உள்ளூர் போட்டிகள் ஆகியவற்றுக்கான நேரலை ஒளிபரப்புக்கான ஆடியோ-விடியோ உற்பத்தி உரிமை தொடர்பான ஒப்பந்தம் ஸ்டார் இந்தியா ஊடக நிறுவனத்துக்கு நீட்டிப்பது தொடர்பான அனைத்து உரிமைகளும் பிசிசிஐ-யிடம் உள்ளது.  எனவே இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது அல்லது நிராகரிப்பது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் பிசிசிஐ மேற்கொள்ளும் என அந்த செய்திக்குரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :