ஐபிஎல் கிர்க்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

Home

shadow

ஐபிஎல் கிர்க்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் ரஹானே-ஜோஸ்பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 14 ரன்கள் மற்றும் 23 ரன்களில் முறையே ரஹானே மற்றும் பட்லர் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்ததுசென்னை தரப்பில் சஹார், சர்துல் தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 152 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க நிலை ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன், டூபிளெஸிஸ், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி, அம்பதி ராயுடு இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :