ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன

Home

shadow

ஐபிஎல் தொடரில் நேற்று  இருவேறு இடங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார் இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19புள்ளி .4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் ஐதராபாத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.   டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் வீர்ர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால்18 புள்ளி 5 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி  எளிதான வெற்றியை பெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :