ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

Home

shadow

ஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 19 புள்ளி 4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இதேபோல், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டாஸ்வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன் ரேட்டை உயர் செய்தனர். 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மட்டும் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை அணி 19 புள்ளி 2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இது தொடர்பான செய்திகள் :