ஐபிஎல்
போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல்
தொடரின் 17-வது
லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்
மோதின.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்
பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி
ஆகியோர் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது
பார்திவ் படேல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார் பின்னர் களமிறங்கிய
ஏபி டி வில்லியர்ஸ் விராட் கோலியுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். விராட் கோலி 84 ரன்னிலும் டி வில்லியர்ஸ் 63 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை
இழந்து 205 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலமிறங்கிய கொல்கத்தா அணியில்
சுனில் நரேன் 10 ரன்னிலும் ராபின் உத்தப்பா 33 ரன்னிலும் கிறிஸ் லின் 43 ரன்னிலும் சீரான இடைவெளியில்
ஆட்டமிழந்தனர். அப்போது கொல்கத்தா அணிக்கு 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது. இந்த
நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல், ஆட்டத்தின்
போக்கை தலைகீழாக மாற்றினார். 18-வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த அவர் டிம் சவுதி வீசிய 19-வது
ஓவரில் 4 சிக்சரும், ஒரு பவுண்டரியும் அடித்து
அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனை அடுத்து கொல்கத்தா அணி
19புள்ளி ஒரு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை
இழந்து 206 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது.