ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்தது

Home

shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் , ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. தொடர்ந்து 4-வது முறையாக டாஸ்ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அனி 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.  ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் களம் புகுந்தனர். ரஹானே 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஹானே, அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைய வித்திட்டார். அணியின் ஸ்கோர் 60 ரன்களாக  உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. ரஹானே 22 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 59 ரன்களில்  கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய ஸ்டீவன் சுமித்தும்  கணிசமான பங்களிப்பை அளித்து நெருக்கடியை தணித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 19 புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :