ஐபிஎல் - டிக்கெட் கட்டணம் வாபஸ்

Home

shadow


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த .பி.எல் கிரிக்கெட் போட்டிகள் புணே நகருக்கு மாற்றப்பட்டதால், அந்தப் போட்டிகளின் டிக்கெட்களுக்கான கட்டணத்தை, வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ரசிகர்கள் திரும்ப்ப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான .பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இடையேயான முதல் போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி .பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிரிக்கெட் போட்டியின்போது சிலர் மைதானத்திற்குள் காலணிகளை வீசியதால் ஆட்டத்தின் நடுவே பதற்றம்ஏ ற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்தது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த .பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா, சென்னை காவல்துறையினர் .பி.எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். சேப்பாக்கத்தில் நடைபெற இருந்த எஞ்சிய 6 போட்டிகளும், மகாராஷ்டிர மாநிலம் புணே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த 6 போட்டிகளையும் நேரில் பார்ப்பதற்காக வாங்கிய டிக்கெட்களுக்கான கட்டணத்தை வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ரசிகர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக டிக்கெட் வாங்கியவர்கள், இணையதளத்தின் மூலமே டிக்கெட் பணத்தை திரும்பப் பெறலாம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :