ஐபிஎல் 7-வது லீக் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை அணி

Home

shadow

.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை  அணி வெற்றிப் பெற்றது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய  லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. குயின்டான் டி காக்கும், ரோகித் சர்மா மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 6 ஓவர்களில் 52 ரன்கள் குவிந்த இந்த ஜோடியில், குயிண்டான் டி காக் 23 ரன்கள் எடுத்த நிலையில்ன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார், யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியின் ரன் ரேட்டை உயர செய்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13  ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து வந்த பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டீ வில்லியர்ஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், பெங்களூர்  அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :