ஐ.எஸ்.எல் கால்பந்து சென்னை அணியை 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி

Home

shadow

                     ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது 

இது தொடர்பான செய்திகள் :