ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி

Home

shadow

                     மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் மோதினஇரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டிய போதும், முதல் 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடினர். 116-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ராகுல் பெகே ஒரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணிக்கு  8 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு 4 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :