ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி

Home

shadow


6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.யும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 

இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி வீரர்கள் 23 மற்றும் 47 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தனர். தொடர்ந்து போராடிய சென்னை அணி 69 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலைப் பதிவு செய்தது. 
இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்து 3-க்கு 1 என்ற கணக்கில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

இதன்மூலம் ஐ.எஸ்.எல் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமை கொல்கத்தா அணியை சேர்ந்துள்ளது. கொரனோ அச்சத்தால் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இந்தப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான செய்திகள் :