ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது

Home

shadow

                          ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் புனேவை 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தங்கள் அணிக்கு வலு சேர்த்தனர். ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :