ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி அணி வெற்றி

Home

shadow

                          ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் அணியை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி அணி வெற்றி பெற்றது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின்  சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோலுடன் சமனிலையில் இருந்தன. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிகோலா கிரெம்விரிக் ஒரு கோல் அடிக்க, பெங்களூரு அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது

இது தொடர்பான செய்திகள் :