ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது

Home

shadow

 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் நேற்று நடைபெற்ற சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.


10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர். சென்னை அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை வீணடித்ததால், இறுதி வரை சென்னை அணி கோல் ஏதும் போடவில்லை. இதேபோல் கேரளா அணியும் கோல் ஏதும் போடாததால் ஆட்டம் கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.

இது தொடர்பான செய்திகள் :