ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி - கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி

Home

shadow

              ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் போட்டியின், சென்னையில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மோதியது. இதில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் அடித்து சமன் செய்தார். சற்றும் சளைக்காத கொல்கத்தா அணி 44-வது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார். இந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மீண்டும் கோல் அடித்து கொல்கத்தா அணி முன்னிலையை அதிகபடித்தியது. இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. இறுதியில் சென்னை அணி 2 க்கு 3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

இது தொடர்பான செய்திகள் :