ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் சென்னை, மும்பை அணிகள் வெற்றி

Home

shadow

                 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் சென்னை, மும்பை அணிகள் வெற்றிப் பெற்றன.


சென்னை எம்.. சிதம்பரம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளசிஸ் களமிறங்கினர்வாட்சன் 26 ரன்னில் அவுட்டானார். டு பிளசிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ரன்னில் வெளியேறினார்இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இறங்கினர். லோகேஷ் ராகுல், சர்ப்ராஸ் கான் நிதானமாக ஆடி அணியின் ரன் ரேட்டை உயர செய்தனர். இருந்த போதும், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இரவு நடைப்பெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. 96 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் ஹைதராபாத் அணி இழந்தது. இதன் மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது

இது தொடர்பான செய்திகள் :