ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் ஹைதராபாத், சென்னை அணிகள் வெற்றி

Home

shadow

.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டங்களில் ஹைதராபாத், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை

அடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 10 ஓவர்களுக்குள்ளாகவே 100 ரன்களை கடந்த ஹைதராபாத் அணியில், பேர்ஸ்டோவ், வார்னர் ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் வீரர்கள், முகமது நபி, சந்தீப் சர்மா ஆகியோரின் பந்து வீச்சில் நிலை குலைந்தனர். முகமது நபி 4 விக்கெட்களும், சந்தீப் சர்மா 3 விக்கெட்களும் எடுத்தனர். எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆர்சிபி அணி, 113 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிப் பெற்றது.

இதேப்போல் சென்னையில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது . இதனை அடுத்து முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 75 ரன்களும் சுரேஷ் ரெய்னா 36 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஸ்டோக்ஸ் 46 ரன்களும் திருப்பதி 39 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஷஹார், தாகூர்,பிராவோ,தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மூன்று வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணி கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டார்.

 

இது தொடர்பான செய்திகள் :