ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி

Home

shadow

 

     ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த்து. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் 2 வெக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த பில்லி ஸ்டான்லேக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாக மாலை 4 மணிக்கு நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :