ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி

Home

shadow

.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடைபெற்ற  13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.  டாஸ்வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், சாம்குர்ரன் ஆகியோர் களம் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இருப்பினும் முதல் ஆறு ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய டேவிச் மில்லர் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19புள்ளி 2 ஓவர்களில்  அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 152ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி தரப்பில் சாம்குர்ரன் ஹாட்ரிக்உள்பட 4 விக்கெட்டுகளையும்  அஸ்வின், முகமது ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்

இது தொடர்பான செய்திகள் :