ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

Home

shadow

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப்சுற்றுக்குள் நுழையும். இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ்ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணி சார்பில் டேவிட் வார்னர் 70 ரன்கள் எடுத்தார்.. பஞ்சாப் அணி தரப்பில் முஜீப் ரகுமான், முகமது ஷமி, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 19 புள்ளி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் லோகேஷ் ராகுல் 71 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.  

இது தொடர்பான செய்திகள் :