ஒரு நாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிய இந்திய வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

Home

shadow

ஒரு நாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிய இந்திய வீரர்களுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்தது.

 புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் கோலி தலைமையில் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்திருந்தனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. புல்வாமா விவகாரத்தை வைத்து இந்திய அணியினர் அரசியலாக்குவதாக கூறி, ஐசிசி தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தினர் கடிதம் எழுதினர். இந்திய அணி வேறு எதற்கோ அனுமதி வாங்கி விட்டு, ராணுவ தொப்பியை அணிந்து விட்டனர் என பிசிபி தலைவர் இஷான் மணி கூறியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக ஐசிசி பொது மேலாளர் கிளேயர் புர்லோங் கூறிகையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக ராணுவ தொப்பிகள் அணியுள்ளதாகக் கூறி பிசிசிஐ ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்தது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :