ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி  சாதனை

Home

shadow

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை நேற்று வெளியிட்டது. இதில் விராட் கோலி 909 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சகட்ட புள்ளிகள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கோலி. மேலும், ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளு மேல் பெற்ற இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இது தொடர்பான செய்திகள் :