ஒலிம்பிக் சாதனை மல்யுத்த வீர்ர் சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Home

shadow

மல்யுத்த வீரர் பர்வீன் ராணா தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒலிம்பிக் சாதனை மல்யுத்த வீர்ர் சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும்  இந்திய மல்யுத்த வீரர்களுக்கான தகுதித் தேர்வு போட்டிகள், டெல்லி  இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றன. இதில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சாதனையாளரான சுஷில்குமார், மற்றொரு வீரரான பர்வீன் ராணாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பர்வீன் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயன்றார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் பர்வீன் ராணாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். இறுதிச் சுற்றில் காமன்வெல்த் போட்டிக்கு பர்வீன் ராணாவே தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து அரங்கின் வெளிப்புறத்தில் இரு வீரர்களின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பர்வீன் ராணாவும், அவரது சகோதரரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மோதல் மற்றும் தாக்குதல் தொடர்பாக சுசில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறையினர் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :