காமன்வெல்த் நிறைவு - தலைவர்கள் வாழ்த்து

Home

shadow


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டிகள் கண்கவர் கலை நிகழ்சிகளுடன நிறைவு பெற்றது. இதில் இந்தியா 26 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.

71 நாடுகள் பங்கேற்ற 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 11 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது. இதில் இந்தியா அதிகபட்சமாக துப்பாக்கிச் சுடுதலில் 7 தங்கப் பதங்கங்களை வென்றது. மல்யுத்தம் மற்றும் பளு தூக்குதலில் தலா 5 பதக்கங்களை கைப்பற்றியது. குத்துச் சண்டை மற்றும் டேபில் டென்னிசில் தலா 3 தங்கப் பதக்கங்களை வென்றது. பேட்மிண்டனில் இரண்டு தங்கமும், ஈட்டி எறிதலில் ஒரு தங்கத்தையும் இந்தியா கைப்பற்றியது.

                இதேபோன்று துப்பாக்கிச் சுடுதலில் 4 வெள்ளி பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. பேட்மிண்டன், குத்து சண்டை மற்றும் மல்யுத்தத்தில் தலா 3 வெள்ளியும், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷில் தலா 2 வெள்ளியும் வென்றுள்ளது. மேலும் குண்டு எறிதலில் ஒரு வெள்ளியை இந்தியா கைப்பற்றியுள்ளது

                இதேபோன்று துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 5 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. மல்யுத்தத்தில் 4 வெண்கலமும், டேபிள் டென்னிஸ், குத்துச் சண்டை, பளு தூக்குதலில் தலா 3 வெண்கலத்தையும் வென்றுள்ளது. பேட்மிண்டன், குண்டு எறிதலில் தலா ஒரு வெண்கல பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. அதிகபட்சமாக இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் 16 பதக்கங்களை கைப்பற்றியுள்ளதுபோட்டியின் முடிவில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டில் 66 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து, தங்களது திறமை மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரின் வெற்றியும், அனைத்து இந்தியர்களையும் பெருமைப்பட வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். முழு திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி, பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :