காமன்வெல்த் – மேலும் ஒரு தங்கம்

Home

shadow


       காமன்வெல்த் ஆண்கள் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ராகுல் அவேர் தங்கம் வென்றார்.

      ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரின் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 8வது நாளான இன்று நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ராகுல் அவேர் தங்கம் வென்றார். முன்னதாக மகளிர் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைஃபிள் ப்ரோன் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளி பதக்கம் வென்றார். இதேபோல் மகளிர் மல்யுத்தப் போட்டியின் 53 கிலோ எடைப் பிரிவில் விளையாடிய இந்தியாவின் பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் 13 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா, தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :