காமன்வெல்த் - 5 தங்கம்

Home

shadow


காமன்வெல்த் போட்டியில்  இந்திய வீரர்கள் கௌரவ் சோலங்கி, சஞ்சீவ் ராஜ்புத், நீரஜ் சோப்ரா, சுமித் வீராங்கனை மேரி கோம், வினிஷ் ஆகியோர்  தங்க பதக்கமும், அமித் மற்றும் மணீஷ் கவுசிக் ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இன்று, குத்துச்சண்டை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றனஇதில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம்  மற்றும் மகளிர் மல்யுத்தப்போட்டி 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினிஷ் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினார்இதேபோல், ஆடவர் குத்துச் சண்டை 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கௌரவ் சோலங்கி, 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத், ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராஆடவர் மல்யுத்தப் போட்டியில் 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் ஆகியோர் தங்கம் வென்றனர். இதனிடையே ஆடவருக்கான குத்துசண்டை போட்டியில் 46-49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அமித் மற்றும் 60 கிலோ எடைப்பிரிவில் மணீஷ் கவுசிக் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும் மகளிர் மல்யுத்தப்போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஷாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :