காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

Home

shadow

 

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனைகள் தேஜஸ்வினி சாவந்த், அஞ்சும் மௌட்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியின் இன்றைய பதக்க வேட்டையை இந்திய வீராங்கனைகள் இரண்டு பதக்கங்களுடன் துவங்கி வைத்துள்ளனர். மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் தங்க பதக்கமும் அஞ்சும் மௌட்கில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். இறுதிச் சுற்றில் 457 புள்ளி 9 புள்ளிகள் எடுத்து புதிய காமன்வெல்த் சாதனையையும் தேஜஸ்வினி படைத்துள்ளார். அஞ்சும் மௌட்கில் 455 புள்ளி 7 புள்ளிகள் எடுத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 16  தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கம் உட்பட 34 பதக்கங்களுடன் இந்தியா தரவரிசையில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :