காரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி

Home

shadow

திண்டுக்கல்லில் நடைபெற்ற டிஎன்பில் கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   காரைக்குடி காளை - காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 7-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய  காஞ்சி வீரன்ஸ் அணி  20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சஞ்சய் யாதவ் 95 ரன்கள் விலாசினார்பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தொடங்கியதுஎதிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் காரைக்குடி அணி 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் ராஜகோபால் சதிஷ் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது தொடர்பான செய்திகள் :