காலபந்து ரசிகர்கள் ஆர்வம்

Home

shadow


உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் 32 அணிகளில், எந்த அணிக்கு வெற்றிக் கோப்பை கைவசமாகும் என்ற ஆவல் உலகெங்கும் இருக்க, அந்த கோப்பையின் மாதிரியை வாங்கி வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்க வியட்நாம் காலபந்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த வியாழக்கிழமை ரஷ்யாவில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிகளை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் காண, உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு 1974 ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் 1930 ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை ஜுலஸ் ரிமெட் டிராபி வழங்கப்பட்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் ஃபிஃபா உலகக்கோப்பை, 18 காரட் தங்கத்தால் ஆனது. 36.8 சென்டிமீட்டர் உயரமும் 6 கிலோ எடையும் கொண்ட இந்த கோப்பையை தங்கள் வசமாக்க, உலக கால்பந்து அணிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், கால்பந்து ரசிகர்கள் இந்த கோப்பையின் மாதிரியை தங்கள் வீட்டில் வைக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனை புரிந்து கொண்ட வியட்நாம் நாட்டு நிறுவனம் ஒன்று, இதன் மாதிரிகளை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இது வரை ஆயிரக்கணக்கானோர் இந்த மாதிரிக் கோப்பையை வாங்கி சென்றுள்ளதாக வியட்நாம் நாட்டு ஹனாய் நகரில் உள்ள இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கோப்பையை கையில் ஏந்தும் போது, ஃபிஃபா தரவரிசையில் 102 வது இடத்தில் இருக்கும் தங்கள் நாடு வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்படுவதாக இதனை வாங்கும் வியட்நாம் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்..

இது தொடர்பான செய்திகள் :