கிராண்ட் ஸ்லாம் தொடரில் 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு பெல்லா முன்னேற்றம்

Home

shadow

          விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் போராடியும் 3-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் தோல்வியை சந்தித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில், கடந்த முறை 2-ம் இடத்தை பிடித்தவரும், 3-ம் நிலை வீரருமான குரோசியாவின் மரின் சிலிச், தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6க்கு 3, 6க்கு ஒன்று என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லாவின் சிறப்பான ஆட்டத்தால், மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6க்கு 4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி இருந்ததால், மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க டை பிரேக்கர்வரை சென்றது. இறுதியில் பெல்லா 7க்கு  ஆறு என வெற்றி பெற்றார்.  பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதில் மரின் சிலிச் 5க்கு 7 என ஆட்டத்தை இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச். தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ள பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :