கிரிக்கெட் இந்தியா வெற்றி

Home

shadow

  

முத்தரப்பு டி20 தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் விளையாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக குசால் மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார். இந்தியா அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், சுந்தர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

      இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா அணி தொடக்க வீர்ர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டோவும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா அணியில் அதிக பட்சமாக மணிஷ் பாண்டே 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :