கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்

Home

shadow

             கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம்  வீரர் 

             இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான், உலகக்கோப்பையை இந்திய அணியின் கையில் முதன்முதலில் முத்தமிடவைத்த அன்றைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஹிமாம் உல் ஹக் எனும் 23 வயது இளம் வீரர் முறியடித்துள்ளார். 

            இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான ஹிமாம் உல் ஹக் (23) 151 ரன்களை குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் 150+ ரன் குவித்த இளம் வீரர்கள் பட்டியலில் இருந்த கபில்தேவை பின்னுக்கு தள்ளி உள்ளார் ஹிமாம் உல் ஹக். 

        1983 உலகக்கோப்பை தொடரின்போது ஜிம்பாப்வேவை எதிர்கொண்ட இந்திய அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இறங்கிய கபில்தேவ் தனி வீரராக 175 ரன்களை விளாசினார். இதன் மூலம் தனி ஒரு வீரராக இளம் வயதில் இங்கிலாந்தில் 150+ ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கபில்தேவ் சேர்ந்தார். இந்த சாதனையை படைத்தப்போது கபில்தேவின் வயது 24. தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹிமாம் உல் ஹக் 131 பந்துகளில் 151 ரன்களை விளாசி அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :