கிரிக்கெட் - சண்டிமால் சஸ்பெண்ட்

Home

shadow


கால தாமதமாக பந்து வீசியதால் இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமாலுக்கு இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேசம் உடனான லீக் போட்டியின் போது இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் கால தாமதமாக பந்து வீசியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராடு நடத்திய விசாரணையில் வங்கதேசம் உடனான போட்டியின் போது தினேஷ் சண்டிமால் 4 ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு 2 டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் தினேஷ் சண்டிமால் பங்கேற்கமாட்டார்.

இது தொடர்பான செய்திகள் :