கிருஷ்ணகிரி - மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி

Home

shadow

                       கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த  மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.


கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.


மாவட்ட  விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கேரம் விளையாட்டுப் போட்டியை காவல் ஆய்வாளர் செல்வராஜ், துவக்கி வைத்தார். 


இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 வயது முதல் 15 வயது உள்ள மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு விளையாடினார்கள். ஒவ்வெரு வயது பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்து மண்டல அளவில் நடைபெற உள்ள கேரம் விளையாட்டுப் போட்டியில் கலந்தக்கொள்ள உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :