கிர்கிஸ்தான் மல்யுத்த தரவரிசைப் பட்டியல்

Home

shadow


உலக மல்யுத்த தரவரிசையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை நவ்ஜோத் கவுர். அண்மையில் கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த வாகையர் தொடரில் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ மல்யுத்த லீக்கில் பெங்களூரு யோதாஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், யுனைடெட் உலக மல்யுத்தம் வெளியிட்டுள்ள உலகத் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதே பிரிவில் பின்லாந்து வீராங்கனை பெட்ரா ஒலி முதல் இடத்தில் உள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆசிய  வாகையர் தொடரில் 50 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் 2-வது இடத்தை பிடித்துள்ளார். பஜ்ரஞ் புனியா, சாக்ஷி மாலிக், ஆகியோர் நான்காவது இடம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :