குதிரை பந்தய போட்டி சாதனை

Home

shadow


ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான குதிரையேற்ற போட்டியில் தமிழக மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த அஷ்வின், கைலாஷ் மற்றும் தரணி ஆகிய மூன்று மாணவர்களும், சிறு வயது முதலே குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாநில மற்றும் தென்னிந்திய அளவிலான குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டிகளில் இந்த மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் மூன்று மாணவர்களும் கலந்துகொண்டனர். அதில் தமிழக மாணவர்கள் 6வது மற்றும் 7வது இடங்களை பிடித்து சர்வதேச வீரர்களை பின்னுக்கு தள்ளி முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :