குத்துச்சண்டை   இந்தியா தங்கம்  

Home

shadow

ஐரோப்பிய  குத்துச்சண்டை  போட்டியான, 69-வது  ஸ்டார்ன்ஜா  நினைவு குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் விகாஸ் கிரிஷண் தங்கப்பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய  குத்துச்சண்டை போட்டியான, 69-வது ஸ்டார்ன்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டிகள் பல்கேரியாவில் நடைபெற்றன. ஆண்களுக்கான  75 கிலோ எடைப் பிரிவு  இறுதிப்போட்டியில், உலக வாகையர் போட்டியில் வெண்கலம்  வென்ற அமெரிக்காவின் டிராய்  இஸ்லேவுடன் மோதிய  இந்திய வீரர் விகாஸ் கிரிஷண், அவரை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை  வென்றார். கடந்தாண்டு  ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய வாகையர் போட்டிக்குப் பிறகு, விகாஸ் பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இப்போட்டியின் சிறந்த வீரராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அமித் பங்கல், 49 கிலோ எடைப் பிரிவில் தங்கமும், கவுரவ் சோலங்கி, 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :