கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, அகமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றி

Home

shadow

               கொச்சியில் நேற்று நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி, அகமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது:


முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்- அகமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் ஐதராபாத் அணி 15 க்கு 11, 13 க்கு 15, 15 க்கு 11, 14 க்கு 15, 15 க்கு 9 என்ற செட் கணக்கில் அகமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

 

இது தொடர்பான செய்திகள் :