கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Home

shadow

   

ராஜஸ்தானுக்கு ஏதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 49-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி  19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 18வது ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப்  அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி விவர பட்டியலில் தற்போதைய நிலவரப்படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில 6 புள்ளிகளுடன் டெல்லி அணி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :