கொல்கத்தா அணியை சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

Home

shadow

ஐ.பி,எல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

12 ஆவது ஐ.பி.எல் தொடரின் 23 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக  கிறிஸ் லின் மற்றும்  சுனில் நரைன்  களமிறங்கினர். தொடக்க ஜோடி இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணியால் சிறப்பான  அடிதளம் அமைக்க முடியாமல் போனது, தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ரஸ்ஸல் மட்டுமே 50 ரன்கள் குவித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்ரஸ்ஸல்லின்  உதவியால் கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு  108 ரன்கள் எடுத்தது, சென்னை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சஹார் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன், தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைபற்றினர். பின்னர் 109 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆட தொடங்கிய  சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன், டு ப்லெஸிஸ் ஆட்டத்தை தொடங்கினர். இதில்  ஷேன் வாட்சன் 17 ரன்களில் சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். மேலும் சுரேஷ் ரெய்னா 14 ரன்களிலும் ,அம்பட்டி ராயுடு 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருந்த போதிலும்   சென்னை அணி 17 புள்ளி 2 ஓவர்களில்  111 ரன்களை எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. டூ ப்லெஸிஸ் 43 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :