கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்

Home

shadow

              கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்

            மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பையிடம்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேகேஆர் அணியின் நேற்றைய ஆட்டம் மிக மோசமாக இருந்தது.  செய்தியாளர்களை சந்தித்த கேகேஆர் அணியின் துணைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் சில காலமாக அணிக்குள் ஒற்றுமை இல்லை என ஒப்புக்கொண்டார். இதனை முன்பே பேசி சரி செய்திருக்க வேண்டும் எனவும், தற்போது, அணிக்குள் ஒற்றுமை இல்லை என்பது அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.   தொடர்ந்து தாங்கள் சந்தித்த 6 தோல்விகளுக்குப் பின் வீரர்களுக்குள் இருந்த உற்சாகம் குறைந்துவிட்டது என்று அவர் கூறினார் .  ஆன்ட்ரு ரசல், அணியின் நிர்வாகம் பற்றியும் கேப்டன்  தினேஷ் கார்த்திக் பற்றியும் வெளிப்படையாகவே விமர்சித்தார், தன்னை 3- வது வீரராக களமிறக்க மறுக்கிறார்கள், என அவர் கூறியது அணியில் ஆரோக்யமான சூழலை பாதித்தது என்று கேடிச் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :