கொல்கத்தாவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Home

shadow

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்களை கொல்கத்தா அணி குவித்தது. இதனை அடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது

இது தொடர்பான செய்திகள் :