கோழிக்கோடு   தேசிய கைப்பந்து  

Home

shadow

 கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் அணியில் ரயில்வே அணியும், கேரளா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் 66-ஆவது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரயில்வே மகளிர் அணியுடன், கேரளா மகளிர் அணியும், ரயில்வே ஆண்கள் அணியுடன், கேரளா ஆண்கள் அணியும் விளையாடுகின்றன. வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தமிழக மகளிர் அணி, மகாராஷ்டிரா மகளிர் அணியுடனும், ஆண்கள் பிரிவில் தமிழக அணியுடன் சர்வீசஸ் அணியும் விளையாடுகின்றன. இப்போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் மட்டுமே அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பைக்கான போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியைப் பெறும்.

இது தொடர்பான செய்திகள் :