கோவையில் மாற்றுத்திறனாளிக்ளுக்கென பல்வேறு பிரிவுகளில் மினி மாரத்தான் போட்டி

Home

shadow

        கோவையில் மாற்றுத்திறனாளிக்ளுக்கென பல்வேறு பிரிவுகளில்  மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நான்காவது ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  கோவை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள்  சார்பாக இந்த போட்டி நடைபெற்றது.  இதில் கண் பார்வையற்றோர், காது கேளாதோர், மாற்றுத்திறன் மாணவர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளாக நடைபெற்றது. கோவை வேளாண்மை பல்கலைகழக மைதானத்தில் துவங்கிய இப்போட்டியை கோவை வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் குமார்  மற்றும் மேற்கு ரோட்டரி தலைவர் சசிகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீல் சேரில் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையளார்களை வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :